Skip to main content

சமயபுர கோவிலில் முழுவீச்சில் நடைபெற்றுவரும் ராஜகோபுர பணிகள்!

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

Rajagopuram works in full swing at Samayapura temple

 

திருச்சி சமயபுரம் கோவிலின் கும்பாபிஷேக விழா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தற்போது கோவிலில் பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. தற்போது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலைச் சுற்றி நான்கு திசைகளிலும் கோபுரங்கள் அமைக்கும் பணி முடிவடைந்தது.

 

தற்போது சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணியானது முழு மூச்சாக நடைபெற்றுவருகிறது. மேலும், சமயபுரம் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டமானது வரும் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் கோவிலுக்கு வந்து முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களிடமும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சமயபுரம் மாரியம்மன் கோவில் காணிக்கை எண்ணும் பணி; உண்டியலில் குவிந்த தங்கம்

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

trichy samayapuram mariamman temple donation counting 

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில், தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.

 

அப்போது கோயில் உண்டியலில் கடந்த 13 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 24 ஆயிரத்து 485 ரொக்கமும் 2 கிலோ 759 கிராம் தங்கமும் 5 கிலோ 117 கிராம் வெள்ளியும் 113 அயல்நாட்டு நோட்டுகளும் 264 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன எனக் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார். 

 

 

Next Story

முன்விரோதத்தில் இளைஞர் கொலை; 3 பேரிடம் போலீசார் விசாரணை

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

trichy samayapuram tasmac incident police investigation started

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ்.கல்லுக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பாபு (வயது 28). சமயபுரம் கடைவீதியில் மாலை கட்டும் வேலை செய்து வந்துள்ளார். வெளியூரிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை கோயிலுக்கு அழைத்து செல்வதில் பாபுவிற்கும் வி.துறையூரைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 6ந் தேதி சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பாரில் பாபு மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த 5க்கும் மேற்பட்டோர் பாபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார் கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மாகாளிக்குடி, வி.துறையூரைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே முக்கியக் குற்றவாளிகளான வி.துறையூரைச் சேர்ந்த வெங்கடேசன், கணேஸ், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேர் கடந்த 9ஆம் தேதி நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த மூன்று பேரையும்  திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இந்நிலையில் சரணடைந்த மூன்று பேரையும் சமயபுரம் போலீசார் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3ல் மனு தாக்கல் செய்து விசாரணைக்காக சமயபுரம் அழைத்து வந்தனர். அங்கு கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள்கள் மற்றும்  துணிகள் மறைத்து வைக்கப்பட்ட இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்று அரிவாள் மற்றும் துணிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கொலை சம்பவம் குறித்து குற்றவாளிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி பின்னர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3ல் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.