தி.மு.க. மருத்துவ அணித் தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கண்டனம்: ’’கடந்த வாரம் கவர்னர் மாளிகையில் செயலராக பணியாற்றும் ராஜகோபால், உடல் நலம் இல்லாமல் இருக்கும் அவர் தாயாரை கவனிக்க 24 மணி நேரமும் சட்டதிட்டங்களை மீறி அரசு கல்லூரிகளில் பயிற்சி பெறும் முதுகலை மருத்துவர்களை கட்டாயப்படுத்தி அவர் இல்லத்திலேயே கவனித்திட அழுத்தம் தந்தார். தொடர்ந்து வீட்டில் வந்து அதிகாரியின் தாயை கவனித்திட இயலாது, அரசு மருத்துவமனையில் உள்ள எங்கள் சேவை முக்கியமாக தேவைப்படுகின்ற ஏழை எளிய மக்களுக்கு அளித்திட வேண்டும், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது என மருத்துவர்கள் கூறிய போது, அவர்களை அதிகாரி மிரட்டியதாக கூறினர்.

அண்மையில் திமுக சார்பில் நடந்து முடிந்த 12000க்கும் மேற்பட்ட ஊராட்சி சபை கூட்டங்களில் மக்கள் ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் போதிய அளவு மருத்துவர்கள் இல்லை , துணை சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் கூடஇல்லை, மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அவரச தேவைக்கு பதட்டத்தோடு செல்லும் வேலைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையினால் உடனடியாக சிகிச்சை கிடைப் பதில்லை என்ற பிரச்னைகளை முன் வைத்தனர்.
உயிர் காக்க வேண்டிய மருத்துவர்களை தங்கள் சுயதேவைக்காக அதிகாரத்தை பயன்படுத்துவது மனிதநேயமற்ற செயல். முதல்வர் உடனடியாக அதிகாரி மீது விசாரணை நடத்திட வேண்டும். மேலும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மருத்துவர்களை அதிகாரியின் இல்லத்திற்கு அனுப்ப பரிந்துரை செய்தவர்கள் மேல் அதிகாரிகள் யார் என கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் . சுயமரியாதை , சமூக நிதி, சகோதரத்துவம் ஆகிய நெறிகளை பின்பற்றிட வேண்டும் என பிறந்தநாள் செய்தியாக கழகத்தலைவர் அறிவுறுத்திய நிலையில் இன்றைய ஆளும் கட்சியினரும் அவர்களோடு அதிகாரிகளும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆதிக்க உணர்வோடு செயல்படுவது கண்டனத்துக்கு உரியது. ’’
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)