Rajagopal case; Court adjourns hearing on two petitions

Advertisment

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜாமீன் கோரி ஆசிரியர் ராஜகோபாலன் மனு மீதான விசாரணை வரும் 3 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது. அதேபோல, காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணையையும் நீதிபதி நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.

சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசியராக உள்ளவர் ராஜகோபால், இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரில் ராஜகோபால் 24 ஆம் தேதி கைதானார்.

இந்த நிலையில் ராஜகோபால் ஜாமீன் கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதே போல் காவல்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி முகமது பரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதே போல் ராஜகோபால் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை நாளைக்கு தள்ளிவைத்தார்.