Skip to main content

தமிழகத்திலும் ராஜாதான்... பா.ஜ.க. கூட்டணியில் தான் அ.தி.மு.க... -ஹெச்.ராஜா பேட்டி

Raja is also in Tamil Nadu ... AIADMK is in BJP alliance ...- H.Raja interview

 

 

பா.ஜ.க. டெல்லிக்கு மட்டும் ராஜா அல்ல தமிழகத்திலும் ராஜாதான் என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜ.க. கூட்டணியில்தான் அ.தி.மு.க. இருக்கிறது. பா.ஜ.க டெல்லியில் மட்டும் ராஜா அல்ல தமிழகத்திலும் ராஜாதான் என்றார். அதேபோல் ஆன்லைன் வகுப்பு குறித்த கேள்விக்கு, காதலால் தற்கொலை நடப்பதால் காதலை தடை செய்ய முடியுமா? அதேபோல்தான் ஆன்லைன் வகுப்புகளும் என்றார். மேலும் கோயில்களை அழிக்கும் துறையாக  இந்து சமய அறநிலைத்துறை இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

 

அண்மையில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில்  செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜு, ''டெல்லிக்கு ராஜான்னாலும் தமிழகத்தில் பா.ஜ.க. பிள்ளைதான். தமிழகத்தில் திராவிட கட்சிகள் மீதுதான் தேசிய கட்சிகள் சவாரி செய்ய முடியும்'' என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஹெச்.ராஜா இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !