Advertisment

'காலிப் பணியிடங்களை உயர்த்துங்கள்'-பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்

 'Raise Vacancies'-Graduate Teachers Strike

Advertisment

பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை உயர்த்துமாறு சேலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''பட்டதாரி ஆசிரியர்கள் என்றால் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள். 2012 ஆம் ஆண்டு வரை பிஎட் முடித்தால் டீச்சர் ஆகலாம் என இருந்தது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு டெட் எக்ஸாம் தேர்ச்சி பெற்றால் தான் டீச்சர் வேலை என சொன்னார்கள். 2018க்கு பிறகு நியமனம் எழுதினால் தான் ஆசிரியராக முடியும் என்று சொன்னார்கள். 2018க்கு பிறகு நியமனமும் எழுதி பாஸ் செய்த 2024 ஆம் பேட்ஜ் பட்டதாரி ஆசிரியர்கள் நாங்கள்.

நியமனம் வைத்தது எங்களுக்கு சந்தோஷம். அதற்கு அரசிற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஏனென்றால் 4 லட்சம் பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. அதில் அவர்கள் ஃபில்டர் பண்ணி எடுத்து விட்டார்கள். ஆனால் இப்பொழுது காலிப்பணியிடங்களை அதிகப்படுத்த சொல்லி நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். 3,192 காலிப் பணியிடங்கள் என அறிவித்துள்ளார்கள். அந்த 3,192-ல் 2,800 பேரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதிலும் 400 காலிப் பணியிடங்களுக்கு யாருக்கும் தகுதி இல்லை என தெரிவித்துள்ளார்கள். 2800 பேரை 12 வருடத்திற்கு பிறகு தேர்ந்தெடுத்துள்ளார்கள். ரொம்ப ரொம்ப வேதனையாக இருக்கிறது. படித்துக் கொண்டே இருக்கிறோம். இவ்வளவும் படித்தும் ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பணி கிடைக்கவில்லை. எங்களுக்கு காலிப் பணியிடங்களை அதிகப்படுத்துங்கள் என கேட்கிறோம்.

Advertisment

37 ஆயிரம் பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். 37 ஆயிரம் பேருக்கும் பணி கொடுங்கள் என்று கேட்கவில்லை. தற்காலிக ஆசிரியர்களாக 5,504 பேரை வைத்து இருக்கிறீர்கள். அவர்கள் எதற்கு? பிஎட் கூட முடிக்காமல் டெம்பரவரி டீச்சராக இருக்கிறார்கள். எங்களை அந்த பணியில் போடுங்கள். பிஎட் படித்து விட்டோம், டெட் பாஸ் பண்ணி விட்டோம், நியமனம் முடித்துவிட்டோம். எங்களுக்கு அந்த ஆசிரியர் பொறுப்புகளை கொடுங்கள்'' என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

teachers Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe