தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள கோரிக்கை மனுவில்
9 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பகுதிநேரமாக பல்வேறுவகை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 2011-12 கல்வி ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர்கள் கல்வி இணைச்செயல்பாடுகளை 6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார்கள்.
உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி பாடங்களில் 16 ஆயிரத்து 549 சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் ஆரம்பத்தில் தரப்பட்டது.
ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி வலியுறுத்தி வந்தார்கள். சட்டமன்றத்திலும் உறுப்பினர்கள் மானியக் கோரிக்கையின்போது பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.இதை தொடர்ந்து 2014ல் அதிகபட்சமாக 40 சதவீதம் ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வால் சம்பளம் ரூ.7ஆயிரமானதோடு மட்டுமில்லாமல் 12 ஆயிரம் நிலுவைத்தொகையும் கிடைத்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11_35.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதன் பின்னர் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கைகளை தொடர்ந்து சட்டமன்றத்திற்குள்ளும், வெளியிலும் பலவழிகளில் வலியுறுத்தினர்.
இந்நிலையில் 2017ம் ஆண்டு ஆகஸ்டு 22 ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக 10 சதவீத ஊதிய உயர்வாக எழுநூறு ரூபாய் ஆகஸ்டு மாதத்தில் இருந்து வழங்க குறிப்பாணை பிறப்பித்தனர். இதனால் தொகுப்பூதியம் 7 ஆயிரத்து 700 ஆனது. ஆனால் SSA வின் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வும், ஏப்ரல் முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகையும் வழங்கி உள்ளது குறிப்பிடதக்கது.
ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பள்ளிகளை திறந்து பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தி முழுநேரமும் நடத்திட அரசு உத்தரவிடுகிறது. அரசின் உத்தரவின்படி ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்ட காலங்களில் பகுதிநேர ஆசிரியர்களே பள்ளிகளை திறந்து முழுநேரமும் நடத்தினர்.
எமிஸ், பவர் பைனான்ஸ், இமெயில் உள்ளிட்ட கணினி சம்மந்தபட்ட வேலை மட்டுமின்றி, பள்ளி நேரங்களில் தரப்படும் எல்லா விதமான வேலைகளையும் இந்த தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் செவ்வனே செய்து வருகிறார்கள். பாட ஆசிரியர்கள் பள்ளி வராத நாட்களிலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளிலும் இவர்கள் பயன்படுத்தப்படும் விதம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் இவர்களின் வாழ்க்கைத்தரம் ஏறிவிட்ட விலைவாசியால் சிக்கலில் தத்தளிக்கின்றது.
8 எட்டு வருஷம் முடிந்து இப்போது 9-வது வருஷம் ஆரம்பித்துவிட்டது. இனியும் தொகுப்பூதியத்தை அதிகபட்சமாக ரூ.15ஆயிரம் வழங்காமல் இருப்பது இவர்களின் எதிர்காலத்தை பாதிக்கின்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vx (1).jpg)
கோவா மாநிலத்தில் ரூ.15ஆயிரம், ஆந்திரா மாநிலத்தில் ரூ.14ஆயிரத்து 203 என அதிகபட்ச சம்பளம் இதே SSA பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். எனவே கல்வித்துறை அதிகாரிகள் இந்த மாநில அரசுகளைப்போல குறைந்தபட்ட அதே தொகுப்பூதியத்தை தமிழகத்திலும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்களின் நியமன அரசாணையில் மே மாதம் சம்பளம் குறித்து எதுவும் ஆணையிடப்படாத நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வோருவரும் இழந்துவரும் மே மாதம் சம்பளம் ரூ.53ஆயிரத்து 400ஐ உடனடியாக வழங்க வேண்டும்.
இது ஒருபுறமிருக்க 8 ஆண்டுகளுக்கும் போனஸ் தரப்படாமல் உள்ளது. வேறெந்த துறைகளிலும் இதுபோன்ற நடந்ததில்லை. SSAவில் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் போனஸ் கொடுத்துவிட்டு பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டும் தராமல் இருப்பது எந்தவகையில் நியாயம். எனவே 8 வருஷ போனஸ் நிலுவைத் தொகையை கணக்கிட்டு உடனடியாக வழங்கவேண்டும். மேலும், இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் சிறப்பு நிதியிலிருந்து குடும்ப நலநிதியாக ரூ.2 இலட்சம் உடனடியாக வழங்கவேண்டும்.
P.F, E.S.I உடனடியாக அமுல்படுத்த வேண்டும். மகளிருக்கு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். 1325 உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் பாடங்களில் நிரந்தரப்பணிக்கு தேர்வி நடத்தியபோதும், தற்போது நடந்த 814 கணினி ஆசிரியர்கள் தேர்விலும் பகுதிநேர ஆசிரியர்கள் முற்றிலும் முன்னுரிமைகூட தரமால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையில் மட்டுமே இதுபோன்று நடக்கிறது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் திட்ட வேலையில் ஒப்பந்த பணியில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்களில் உள்ள காலியாக உள்ள4 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பொது மாறுதலை பகுதிநேர ஆசிரியர்களுக்கும் நடத்த வேண்டும். அனைவரையும் கல்வி தகுதிக்கேற்ப சிறப்பு தேர்வு நடத்தி அவரவர் பாடப்பிரிவுகளில் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுங்கள். காலதாமதம் ஆகும் எனில் அதுவரை குறைந்தபட்சம் ரூ.15ஆயிரம் சம்பளத்தை வழங்க அறிவிப்பை அரசு வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)