மழைக்காலங்களில் மின்சாரம் தடைப்பட்டால் இரண்டு, மூன்று நாட்கள் மின்சாரம் வருவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ள தமிழக அரசு ஊழியர்களையும் கூடுதலாக நியமித்து மின் பராமரிப்பை செய்யாதது ஏன்?எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கம்பம் ஏறி களப்பணி ஆற்றுபவர்கள் குறைவாகவே உள்ளனர். இதனால் மக்களின் தேவைக்கு ஏற்ப்ப பணியாற்ற முடியவில்லை.

மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ள தமிழக அரசு ஊழியர்களையும் கூடுதலாக நியமித்து போதுமான மின் உபகரண பொட்களையும் வழங்கி மின் பராமரிப்பை செய்யாதது ஏன்?

செந்துறை ஒன்றியத்தில் செந்துறை, ஆர். எஸ். மாத்தூர் பகுதிகளில் கிராமப்புறங்களில் மழைக் காலங்களில் மின்சாரம் தடைபட்டால் 2,3நாட்கள் மின்சாரம் வருவதில்லை. குடிநீர் பிரச்சனை ஏற்ப்படுகிறது. சரி செய்வதற்கும் போதுமான ஆட்கள் மின்சார வாரியத்தில் இல்லை.

Advertisment

அதேபோல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 97 மின் மாற்றிகள் (Transformer) உள்ளது. இவற்றை பராமறிக்கவும்,பழுது பார்த்துகொள்ளவும் 15 லயன்மேன், உயர்மேன், என களப்ணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் 5 பேர் மட்டுமே பணியாற்றும் அவல நிலை உள்ளது. இவர்களால் மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பு பணியை செய்ய முடியும்?.

30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மின்வட கம்பிகள் அடிக்கடி அறுந்து விழும் நிலையில் உள்ளது. இதில் மின்சாரம் செல்லும் போது சரியாக எர்த் கிடைக்காததால் ரிட்டன் ஆகிறது (Rettan Saplai). மேலும் சராசரியை விட கூடுதல் மின் அழுத்தம் ஏற்ப்படுவதால் வீடுகளில் உள்ள மின்சாதனப் பொருள்கள் பழுது படுகிறது. இந்த அவலநிலையை போக்க கூடுதலாக ஊழியர்களை நியமித்து பழைய கம்பிகளை மாற்றி சீரான மின்சாரம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என செந்துறை ஒன்றிய திமுக(வ) திமுக செயலாளர் மு.ஞானமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.