Advertisment

9 மாவட்டங்களில் மழை; சென்னைக்கு ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவிப்பு

Rainy Districts; Important Announcement Given By The Collector To Chennai

Advertisment

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பல இடங்களில் அதிகாலை முதல் மழை பொழிந்து வருகிறது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் இன்று சென்னையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே தெரிவித்துள்ளார்.

Chennai weather
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe