/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/502_30.jpg)
திருச்சி ஏர்போர்ட் ராஜமாணிக்கம் பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டின் அருகில் சுமார் 50 அடி தூரத்தில் காலி மனையில் வேறொரு நபர்கள் வீடு கட்டுவதற்காக பள்ளம் பறிக்கப்பட்டு இருந்தது.
மழையின் காரணமாக மேலும் பள்ளம் தோண்டாமல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பள்ளத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணத்தினால் மழை நீர் நிரம்பி இருந்துள்ளது. mஅந்த பகுதியில் நேற்று மாலை சக்திவேல் மகள் பாண்டி ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்துள்ளார். சுமார் 4 அடி ஆழத்தில் உள்ள மழைநீர் தேங்கி இருந்த குழிக்குள் விழுந்துள்ளார்.
இதனை அறியாத குடும்பத்தினர், பாண்டி ஸ்ரீயை நீண்ட நேரம் தேடியுள்ளனர். பின்னர் மாலை 6 மணி அளவில்மழை நீர் நிரம்பிய இந்த படத்தில் அவரை மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குழந்தையைஅரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து பார்த்தபோது உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக கே.கே. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மழை நீர் தேங்கிய குழியில் விழுந்த சிறுமியின் மரணம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)