Advertisment

"மழைநீரை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெறுகிறது"- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி!

publive-image

Advertisment

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தேசியபேரிடர் மீட்புபடை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை என 15 குழுக்கள் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளன.

10 சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் வெள்ளம் சூழ்ந்த, தாழ்வான பகுதிகளில் வசித்த 2,859 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

Chennai heavy rains kkssr ramachandran minister
இதையும் படியுங்கள்
Subscribe