Advertisment
தமிழகத்தில் 10 மாவட்டங்களில்மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (14.04.2021) அறிவித்திருந்தது. அதேபோல் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த மழையினால், சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஆங்காங்கே சாலையில் நீர் தேங்கியது அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.