chennai

சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், இன்று தென்மேற்க வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வரும் 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழைக்கும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. கனமழையை பொறுத்தவரையில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் எதிர்பார்க்கலாம்.

சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Advertisment

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை தொடரும். ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். மீனவர்கள் நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறினார்.