nn

டிசம்பர் 30ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் ஏற்கனவே சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் அண்மையில் தென் தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதீத கன மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் சிக்கியது.

Advertisment

பலகட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது படிப்படியாக ஒவ்வொரு பகுதிகளும் மீண்டு வருகிறது. இந்தநிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாகவரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வலுவான வடகிழக்கு காற்றும் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் மழைக்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.