Advertisment

சென்னை பல இடங்களில் மழை பொழிவு

Rainfall at many places in Chennai

கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisment

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 மற்றும் 13 ஆகிய இரு தேதிகளிலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisment

இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னையின்வடபழனி, சூளைமேடு, அசோக் நகர், அண்ணாநகர், ராயப்பேட்டை, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி நகர்,மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மழை பொழிந்து வருகிறது.

Chennai rain
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe