தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு திசை மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்தது.
இந்த நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர். நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.