'Rain will continue in these districts for the next three hours' - Chennai Meteorological Department announcement!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒன்று முதல் மூன்று மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்" என்று அறிவித்துள்ளது.

Advertisment

இதனிடையே, சென்னையில் மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், மீனம்பாக்கம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், கோடம்பாக்கம் தியாகராய நகர், குரோம்பேட்டை, பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.