தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது.அதே சமயம் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.