நிவர் புயல் காரணமாக சென்னையின் பெரும்பாலன பகுதிகளின் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. இந்நிலையில் கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் இன்றும் மழை நீர் வடியாதததால் அச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானர்கள். மேலும் மழை நீர் வடியாத காரணத்தால் அச்சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.