Advertisment

புழல் அருகே சாலையில் தேங்கிய மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி

 Rain water stagnated on the road near Puzhal; Motorists suffer

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில்,புழல் சிறை அருகே மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர்.

Advertisment

சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர், புழல், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையானது பெய்து வருகிறது. புழல் சிறை அருகே அம்பத்தூரில் இருந்து புழல் வரை செல்லும் சாலை, கோயம்பேட்டிலிருந்து புழல் நோக்கி செல்லும் சாலை, கேம்ப் ரோடு ஆகிய மூன்று சாலைகளும் சந்திக்கும் இடத்தில் மழை நீரானது அதிகப்படியாக தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். அந்த பகுதி அதிகமாக கனரக வாகனங்கள் செல்லும் பகுதி என்பதால், தேங்கியுள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

Advertisment

Chennai puzhal rain weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe