Skip to main content

தொடர் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்! (படங்கள்)

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுக்க பலத்த மழை பெய்துவருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான நீர்நிலைகளும் நிறைந்துள்ளன. அதீத மழைப் பொழிவால், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி இரவு முதல் சென்னையில் பெய்த பெருமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது.

 

அதன்பிறகு தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மின் மோட்டார் உதவியுடன் தேங்கிய மழை நீரை அகற்றிவருகின்றனர். இருந்தபோதிலும் சென்னையில் நேற்று (10.11.2021) மாலைமுதல் பெய்துவரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை அறிஞர் அண்ணா நகர், புழல், சைக்கிள் ஷாப் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினிகாந்த் உதவி

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
rajini helped affected people by cyclonemichaung

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பாய், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களை ரஜினிகாந்த் அனுப்பி வைத்துள்ளார். ரஜினிகாந்த் பவுண்டேஷன் மற்றும் அகில இந்திய தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இன்று ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

புயல் பாதிப்பு - வைரமுத்து நிதியுதவி

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
a

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே திரைப் பிரபலங்கள் விஜய், சூர்யா, கார்த்தி, நயன்தாரா உள்ளிட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகப் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். மேலும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நாடு படக்குழுவினர், வெப்பன் படக்குழு, அன்னபூரணி படக்குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினர்.

இந்த நிலையில் வைரமுத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர் குடிக்கத்தான் இல்லை ஒருதுளி' எனும் ஆங்கிலக் கவிதை  நினைவின் இடுக்கில் கசிகிறது. வீட்டுக்குத் தண்ணீர் இல்லை
என்பது சிறுதுயரம்  வீட்டுக்குள்ளேயே தண்ணீர் என்பது பெருந்துயரம்.

விடியும் வடியும் என்று காத்திருந்த பெருமக்களின் துயரத்தில் பாதிக்கப்படாத நானும் பங்கேற்கிறேன். என் கடமையின் அடையாளமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன். பொருள்கொண்டோர்  அருள்கூர்க சக மனிதனின் துயரம் நம் துயரம் இடர் தொடராதிருக்க இனியொரு விதிசெய்வோம்; அதை எந்தநாளும் காப்போம்” என பதிவிட்டுள்ளார்.