சென்னையில் கடந்த சில நாட்களாகக்கனமழை பெய்துவருகிறது. அதனால்சில இடங்களில் மழை நீர்குளம் போல்தேங்கியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி.நகர் மீனவர் குடியிருப்பு பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால்அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதே போன்று பெரும்பாக்கம் எழில் நகர் சாலைகள் அனைத்தும் மழை நீரால் சேதமடைந்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க, மழையினால் வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரால் அந்த சாலை மூடப்பட்டதையடுத்துஅப்பகுதி சிறுவர்கள் குளித்து விளையாடி வருகின்றனர்.
குற்றால அருவியா இது? சென்னை மழையில் சிறுவர்கள் அட்ராசிட்டி (படங்கள்)
Advertisment