தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி வரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
புதுச்சேரியில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் மையப்பகுதியான ரெயின்போ நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகளில் நீர் தேங்கியுள்ளது. இதேபோல் காரைக்காலிலும் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்றும் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.