ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தொடர் மழை காரணமாக சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாகத்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வரும் நிலையில், ஈரோட்டில் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழையானது பொழிந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தாளக்கொம்புதூர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. சுமார் மூன்று அடி உயரத்திற்கு வீட்டில் மழை நீர் தேங்கியதால், நள்ளிரவில் வீட்டில்உறங்கிக் கொண்டிருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் நீரை வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர்.