
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இரண்டு மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளை (4.11.2023) மிக கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மழையின் காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரியில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் நெல்லை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us