j

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய தமிழகத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை மையம் அறிவித்த்துள்ளது.