Rain for three days in Tamil Nadu .... Meteorological Center Information!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் எனச்சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 17ஆம் தேதி வரை கனமழை பெய்யலாம். ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பொழியும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேல் பவானியில் 7 சென்டி மீட்டர் மழையும், திருப்பூர், ஓமலூரில் 6 சென்டி மீட்டர் மழையும், பரளியாறு, குமாரபாளையம், பந்தலூரில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment