weather

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,

இரண்டு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுசேரியில் ஒரு சில இடங்களில்மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

Advertisment

கடந்த இரு தினங்களில் சின்னக்கல்லாரில் 7 சென்டி மீட்டர் மழையும், வால்பாறை, மேட்டுப்பாளையத்தில் 4 சென்டி மீட்டர் மழையும் பொழிந்துள்ளது என கூறினார்.

மேலும் மத்திய வாங்க கடலில் நிலைகொண்டிருக்கும் டிட்லி புயல் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கரையில் கோபால்பூருக்கும் கலிங்கபட்டினத்திற்கு இடையே நாளை காலைகரையை கடப்பதால் வரும் 11 தேதிவரை மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.அதேபோல் வரும் 14-ஆம் தேதிவரை அரபிக்கடல் பகுதிக்கும் மீனவர்கள்செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisment