Skip to main content

24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முடிகிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "தமிழகம் மற்றும் புதுவையில் 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் முடிந்து விடும். தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை 2% அதிகம் பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி 64%, ராமநாதபுரம் 45%, நெல்லை 45%, தூத்துக்குடியில் 31% மழை பதிவாகியுள்ளது. அதேபோல் குறைந்த பட்சமாக மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 24% பருவமழை பெய்துள்ளது. 

rain session over director of meteorological department chennai


சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 16% குறைவாக பெய்துள்ளது. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய இல்லை; வறண்ட வானிலையே நிலவும்." இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். 

 




 

சார்ந்த செய்திகள்