/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm12333.jpg)
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, ஆர்.பி.உதயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் துறை அதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை பெய்த வடகிழக்கு பருவமழையின் அளவு, 'நிவர்' புயல் பாதிப்பு, இழப்பீடு, வர உள்ள புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவைகுறித்து முதல்வர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தென் தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)