R AIN

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

Advertisment

இன்று கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகைவருவாய் கோட்டத்தில் உள்ளள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். புயல்பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாததால் இன்று அப்பகுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அதேபோல் சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. அதேபோல் திருவள்ளூரிலும் பெரியகுளம், செங்குன்றம், பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisment

நெல்லை மாவட்டத்தில் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் குற்றாலத்தில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் 5 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் வட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளிகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காஞ்சிபுரம். திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி. கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.