அடுத்த மூன்று நாட்களுக்கு மழை... மீனவர்களுக்கு எச்சரிக்கை

 Rain for the next three days... Warning to fishermen

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். வரும் அக்டோபர் 7, 8 ஆகிய தேதிகளில் திருச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைபொறுத்தவரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடக்கு கடலோர ஆந்திர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா உள்ளிட்ட கடற்பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

rain Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe