Skip to main content

அடுத்த மூன்று தினங்களுக்கு மழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

Rain for the next three days; Meteorological Center warning

 

10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன், “தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை சற்று வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை காலை வரை வடமேற்கு திசையில் தமிழகம் புதுவை நோக்கி நகரக்கூடும். பின்னர் தமிழகம் கேரள பகுதிகளைக் கடந்து அரபிக்கடல் பகுதிக்குச் செல்லும். 

 

கடந்த 24 மணி நேரத்தில் 21 இடங்களில் மழைப் பதிவாகியுள்ளது. அடுத்த மூன்று தினங்களில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்குள் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை அல்லது மிகக் கனமழை பெய்யக்கூடும். 

 

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். பொதுவாக அடுத்த மூன்று தினங்களில் மழை இருக்கும். மீனவர்களைப் பொறுத்தவரை, குமரிக் கடல் மன்னார் வளைகுடா தமிழக கடற்கரை பகுதிகள், தென் மேற்கு வங்கக் கடல் பகுதிபோன்ற பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்” எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்