அடுத்த 3 மணி நேரத்தில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

 Rain in next 3 hours Meteorological Department Notification

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த இரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம்மற்றும் செங்கல்பட்டுஉள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, இமாச்சலப்பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe