Rain in many districts in next 3 hours

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், மதுரை, தேனியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, ஈரோடு, நெல்லை, தென்காசியில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment