Advertisment

தொடரும் மழை; தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை!

Rain in many districts including Chennai in Tamil Nadu for the next 3 hours

Advertisment

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உட்படபுறநகர்பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட 2 மணிநேரமாக மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள்வழக்கம் போல் இயங்கும் என் அம்மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

Vellore schools rain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe