Advertisment

தொடரும் மழை... நீலகிரியில் இன்றும் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை!  

 Continued rain... Holiday for 4 taluk schools in Nilgiris today!

Advertisment

தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவையில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொடர்மழை காரணமாக வால்பாறை தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடலூரில் மங்கொலி பகுதியில் உள்ள தரைப்பாலம் உடைந்தது. அப்பொழுது வெள்ளத்தில் ஒருவர் சிக்கிக்கொள்ள அங்கிருந்த பொதுமக்கள் கையில் இருந்த துண்டை ஒன்றாக கட்டி அதை வைத்து வெள்ளத்தில் சிக்கியவரை போராடி மீட்ட காட்சிகள் வெளியான நிலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

nilgiris rain
இதையும் படியுங்கள்
Subscribe