
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஓம் சக்தி நகர், மாரியம்மன் கோவில் தெரு, சாதிக் நகர், சக்ரா நகர், ஸ்ரீநிவாச நகர், ஜனனி நகர், செல்வ கணபதி நகர், பத்மாவதி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநகராட்சி சார்பில் மழை நீரை அகற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு கூட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் இருக்கிறது.
Follow Us