Advertisment

மீட்புப் பணியை தாமதப்படுத்திய மழை...

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியரின் 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள நிலத்தில் நடந்துசென்றபோது, ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

Advertisment

rescue rain

பயன்பாடின்றி இருந்த அந்த ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியிருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் கீழே இறங்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து போலீஸார், தீயணைப்பு படை மற்றும் ஐந்து மீட்புக் குழுக்கள் சிறுவனை மீட்பதற்காக போராடி வந்தனர். சிறுவன் ஆழ்துளாய் கிணற்றில் விழுந்து 17 மணிநேரத்திற்கு மேலாகிவிட்டது. அதிகாலை வரை சிறுவன் சுவாசித்திருப்பது மீட்புக்குழுவுக்கு தெரிந்திருக்கிறது. இதனையடுத்து சிறுவனின் மேல் மணல் சரிந்ததால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

Advertisment

18 மணிநேரமாக சிறுவன் ஆழ்துளாய் கிணற்றிலேயே இருப்பதனால் சிறுவன் சோர்வுற்ற நிலையில் எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறான். ஊர் மக்களில் தொடங்கி அனைவருமே சிறுவன் பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

சுர்ஜித்தின் தயார் என் குழந்தை பத்திரமாக வந்துவிடுவான் என்று தீபாவளிக்காக ஆடையை தையில் மெஷினில் தைத்துக்கொண்டிருக்கிறார். இந்த சம்ப்வம் அனைவரையும் மனம் உருகச் செய்துள்ளது. \

தற்போது சென்னையிலிருந்து வந்திருக்கும் ஒரு மீட்புக் குழு சிறுவனின் மேல் சரிந்த மணலை விலக்கி, இடுக்கி போன்ற கருவியை வைத்து மீட்க முயற்சி செய்து வருகிறது.

நெய்வேலி என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிபவர்கள் கிருஷ்ணராவ் தலைமையில் அதிநவீன கருவியுடன் திருச்சிக்கு ஒரு மீட்புக் குழு விரைந்துள்ளது.

இந்நிலையில் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணியில் மழை குறுக்கிட்டுள்ளதால் மழைநீர் உள்ளே செல்வதை தடுக்க தார்பாய்கள் கட்டப்பட்டு நடவடிக்கை.

manapparai Rescue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe