Advertisment

மழை எதிரொலி; எங்கெல்லாம் நாளை விடுமுறை?- வெளியான அறிவிப்பு

Rain echoes; Holidays for schools and colleges only in one district

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (12.12.2024) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதே சமயம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதனால் ஆரஞ்சு அலர்ட் விடப்படுகிறது. கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நாளையும் தொடர் மழை இருக்கும் நிலையில் விழுப்புரம் மற்றும் தூத்துக்குடியில் நாளை (13/12/2024) அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விழுப்புரத்தில் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக தேர்வுகள் நாளை இருந்தால் நடத்திக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Rainfall villupuram weather
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe