Rain that damaged the school; Employees who dry the certificates

Advertisment

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விழுப்புரத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் விழுப்புரத்திற்கு உட்பட்ட திருக்கோவிலூர் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் இருந்த ஆவணங்கள் மழை நீரில் நனைந்து சேதமானது. பள்ளி ஊழியர்கள் அவற்றை வெயிலில் உலர்த்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் மாணவர்களின் சான்றிதழ்களை வெயிலில் துணியைப் போல காய வைத்திருக்கின்றனர். பள்ளி மாணவர்களுடைய ஆவணங்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களின் ஆவணங்கள் பள்ளி தொடர்பான ஆவணங்களும் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 அடி அளவிற்கு பள்ளி வளாகத்தில் மழை தேங்கியதால் தரைதளம் முழுவதுமாக மூழ்கியது. இதனால் பள்ளியில் இருந்து கணினி உள்ளிட்ட பல பொருட்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளது.