ADVERTISEMENT

"ஆட்சிக்கு வந்ததில் இருந்து மழை"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 

11:56 AM Nov 20, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

சென்னை கோபாலபுரத்தில் ஸ்ரீகீதா பவன் அறக்கட்டளை இன்று (20/11/2022) காலை ஏற்பாடு செய்திருந்த 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கான இலவச திருமணத்தை தாலி எடுத்துக் கொடுத்து தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், தி.மு.க. எம்.பி. கனிமொழி, உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மழை பெய்துக் கொண்டே இருக்கிறது. ஆட்சிக்கு வரும் போது கரோனா தொற்று இருந்தது; பிறகு மழை இடைவெளியின்றிப் பெய்கிறது. மழைப் பெய்து வருவதால் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்து கவலையில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் உடனுக்குடன் தீர்வு காணும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி கோபாலபுரம். மாற்றுத்திறனாளி என பெயர்சூட்டி வாஞ்சையோடு அழைத்தவர் கலைஞர். மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவுப் பெற்றுள்ளது. எஞ்சிய பணிகளும் விரைவில் முடிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT