Skip to main content

சென்னையை புரட்டிப்போட்ட மழை (படங்கள்)

Published on 30/11/2024 | Edited on 30/11/2024

 

 

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) மாலை 5.30 மணி நிலவரப்படி புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக - புதுவை கடற்கரையில் காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாகக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.  பேருந்து; ரயில்; விமான சேவை என அனைத்து போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களின் புறப்படும் இடங்கள் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

சார்ந்த செய்திகள்