hj

இன்று காலையில் வீசிய கடும் வெயிலை தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை முதல் மழை பெய்து வருகிறது.

Advertisment

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை முதல் கன மழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, சேப்பாக்கம், மெரினா, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனப் போக்குவரத்துக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.