தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் பல இடங்களில் பரவலாக கனமழை பொழிந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.