Advertisment

7 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

nn

கடந்த ஒரு வார காலமாக வட மாநிலங்களில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் தாக்கமாக தமிழக பகுதிகளில் காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட வேகமாக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

தமிழகப் பகுதிகளின் மேல் காற்று திசையின் போக்கு மாற்றம் அடைந்திருப்பதால் மழை தரக்கூடிய சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இரவு 7 மணி வரை ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி திருவள்ளூர்,சென்னை,செங்கல்பட்டு,கோவை,காஞ்சிபுரம்,திருப்பூர்,தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment
weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe