Advertisment

7 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Rain alert for 7 districts

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை ஏழு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

வெளியான அறிவிப்பின்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, விருதுநகர், திருப்பத்தூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தொடர் மழைப்பொழிவு காரணமாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 82.97 அடியாக உள்ளது. நீர் இருப்பு 17.3 டிஎம்சி ஆக உள்ளது. நீர்வரத்து 1,786 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 855 கனஅடியாக உள்ளது. வரும் ஜூன் எட்டாம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவையில் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tamilnadu HEAVY RAIN FALL weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe