Rain alert for 4 districts

Advertisment

தமிழகத்தில் பிற்பகல் ஒரு மணி வரை 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிற்பகல் ஒரு மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் இன்று இயல்பை விடஇரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழையும் பொழியவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.