Rain alert for 4 districts

Advertisment

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அந்தஅறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிகபட்சமாக 7.8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் செங்குன்றத்தில் 7.5 சென்டிமீட்டர் மழையும். ஆவடியில் 7.3 சென்டிமீட்டர் மழையும், சோழவரத்தில் 5.4 சென்டிமீட்டர் மழையும், தாமரைப்பாக்கத்தில் 4.8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றம், சோழவரம், ஆவடி, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது.