Rain alert for 18 districts; A sudden instruction given to Udhakai tourists

Advertisment

தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில்மழை பொழிந்து வரும் நிலையில் இரவு 10 மணி வரை தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் இரவு 10:00 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் தர்மபுரி, திருச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீலகிரி மற்றும் கோவைக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதகைக்கு சுற்றுலா வரும் பயணிகள் பாதுகாப்பாக வர வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதுபோல கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.