Advertisment

12 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

 Rain alert for 12 districts

Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பொழிந்து வரும் நிலையில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெளியான அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக சோத்துப்பாறை அணைப் பகுதியில் 12.3 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. பெரியாறு அணை 7.3 சென்டி மீட்டர் மழையும், தேக்கடியில் 6 சென்டி மீட்டர் மழையும், பெரிய குளத்தில் 5.2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

தொடர் கனமழை காரணமாக பெரியகுளம் அருகே வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வராக நதி ஆற்றங்கரையோர மக்களுக்கு இதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவோ,இறங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

enviroinment weather
இதையும் படியுங்கள்
Subscribe